பாடல் 2044
ஆசிரியர் அறியப்படவில்லை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் . . . .
நாடு பல இறந்த நன்ன ராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, . . . .
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே' என முயங்கினள் அழுமே!
மணிமிடைபவளம்