நூல்கள்›அகநானூறு›பாடல் 2037

பாடல் 2037

கபிலர்

'உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇ,

பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள்,

மின்னு நிமிர்ந்தன்ன கனங்குழை இமைப்ப,

பின்னு விடு நெறியிற் கிளைஇய கூந்தலள்,

வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி, . . . .

மிடை ஊர்பு இழிய, கண்டனென், இவள்' என

அலையல் வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைச்

சூர் உடைச் சிலம்பில், சுடர்ப்பூ வேய்ந்து

தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே;

நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் . . . .

கனவு ஆண்டு மருட்டலும் உண்டே; இவள்தான்

சுடர் இன்று தமியளும் பனிக்கும்; வெருவர

மன்ற மராஅத்த கூகை குழறினும்,

நெஞ்சு அழிந்து அரணம் சேரும்; அதன்தலைப்

புலிக்கணத் தன்ன நாய் தொடர்விட்டு, . . . .

முருகன் அன்ன சீற்றத்துக் கடுந் திறல்

எந்தையும் இல்லன் ஆக,

அஞ்சுவள் அல்லளோ, இவள் இது செயலே?

மணிமிடைபவளம்

← பாடல் 2036பாடல் 2038 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்