நூல்கள்›அகநானூறு›பாடல் 2036

பாடல் 2036

வேம்பற்றூர்க் குமரனார்

அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட

பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த

அரி நிறக் கலுழி ஆர மாந்தி,

செரு வேட்டுச், சிலைக்கும் செங் கண் ஆடவர்,

வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் . . . .

எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல்

பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி,

கான யானை கவளம் கொள்ளும்

அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார்

நெஞ்சு உண மொழிப மன்னே - தோழி! . . . .

முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து,

பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய்,

வினை அழி பாவையின் உலறி,

மனை ஒழிந்திருத்தல் வல்லு வோர்க்கே!

மணிமிடைபவளம்

← பாடல் 2035பாடல் 2037 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்