நூல்கள்›அகநானூறு›பாடல் 2035

பாடல் 2035

ஆவூர் மூலங்கிழார்

முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்

மூட்டுறு கவரி தூக்கி யன்ன,

செழுஞ் செய் நெல்லின் சேய் அரிப் புனிற்றுக் கதிர்

மூதா தின்றல் அஞ்சி, காவலர்

பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, . . . .

காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்

தீம் புனல் ஊர! திறவிது ஆகக்

குவளை உண்கண் இவளும் யானும்

கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,

காயா ஞாயிற்று ஆகத்து, அலைப்பெய, . . . .

'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,

நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!

கள்ளும் கண்ணியும் கையுறையாக

நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, . . . .

தணி மருங்கு அறியாள், யாய் அழ,

மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?

மணிமிடைபவளம்

← பாடல் 2034பாடல் 2036 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்