பாடல் 2034
பாலை பாடிய பெருங்கடுங்கோ
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை! என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவி யோரே
நோய் நாம் உழக்குவம் ஆயினும், தாம் தம் . . . .
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாண நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது . . . .
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரல் ஊன்று வடுவின் தோன்றும் . . . .
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.
மணிமிடைபவளம்