நூல்கள்›அகநானூறு›பாடல் 2033

பாடல் 2033

பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்

படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்

நெடு நீர் அவல பகுவாய்த் தேரை

சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,

குறும் புதல் பிடவின் நெடுங் கால் அலரி

செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, . . . .

வெஞ் சின அரவின் பை அணந்தன்ன

தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,

திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்

காமர் துணையொடு ஏமுற வதியக்,

காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; . . . .

ஓடுபரி மெலியாக் கொய்சுவல் புரவித்

தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப

ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு

நம் வயிற் புரிந்த கொள்கை

அம்மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2032பாடல் 2034 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்