நூல்கள்›அகநானூறு›பாடல் 2030

பாடல் 2030

காவன் முல்லைப் பூதரத்தனார்

'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து

இன் அமர் கேளிரோடு ஏமுறக் கெழீஇ,

நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என,

மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது

ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு . . . .

உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக்

கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த

கோடுஅலம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில்

தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள்

அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் . . . .

பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல்,

கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு

உறுவது கூறும், சிறு செந் நாவின்

மணி ஓர்த்தன்ன தெண் குரல்

கணி வாய்ப், பல்லிய காடு இறந்தோரே! . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2029பாடல் 2031 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்