நூல்கள்›அகநானூறு›பாடல் 2027

பாடல் 2027

பரணர்

பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை,

கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின்,

வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை

தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி;

உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; . . . .

சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட!

கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென,

காணிய செல்லாக் கூகை நாணி,

கடும் பகல் வழங்கா தாஅங்கு, இடும்பை . . . .

பெரிதால் அம்ம இவட்கே; அதனால்

மாலை, வருதல் வேண்டும் - சோலை

முளை மேய் பெருங் களிறு வழங்கும்

மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே.

மணிமிடைபவளம்

← பாடல் 2026பாடல் 2028 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்