பாடல் 2025
உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர், . . . .
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
இயங்கல் ஆனாது ஆயின்; வயங்கிழை
யார்கொல் அளியன் தானே - எம் போல்
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் . . . .
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
ஆயமும் அயலும் மருள,
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டா தோளே?
மணிமிடைபவளம்