நூல்கள்›அகநானூறு›பாடல் 2020

பாடல் 2020

நக்கீரர்

அம்ம வாழி, தோழி! கைம்மிகக்

கனவும் கங்குல்தோறு இனிய; நனவும்

புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின;

நெஞ்சு நனிபுகன்று உறையும்; எஞ்சாது

உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, . . . .

மழை கால் நீங்கிய மாக விசும்பில்

குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,

அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;

மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கி,

பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய . . . .

விழவு உடன் அயர, வருகதில் அம்ம!

துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி,

தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின்

புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப்

பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, . . . .

கூழைக் கூந்தல் குறுந் தொடி மகளிர்

பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து,

பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்

கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு

தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; . . . .

நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும்

செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால்

வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன

நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப்

புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை . . . .

நரந்த நறும் பூ நாள் மலர் உதிர,

கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை,

தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய

வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே.

மணிமிடைபவளம்

← பாடல் 2019பாடல் 2021 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்