நூல்கள்›அகநானூறு›பாடல் 2019

பாடல் 2019

அம்மூவனார்

பெருங் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்

இருங் கழிச் செறுவின் உழாஅது செய்த

வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

என்றூழ் விடர குன்றம் போகும்

கதழ் கோல் உமணர் காதல் மடமகள் . . . .

சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி,

'நெல்லின் நேரே வெண் கல் உப்பு' எனச்

சேரி விலைமாறு கூறலின், மனைய

விளி அறி ஞமலி குரைப்ப, வெரீஇய

மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு, . . . .

இதை முயல் புனவன் புகைநிழல் கடுக்கும்

மா மூதள்ளல் அழுந்திய சாகாட்டு

எவ்வம் தீர வாங்கும் தந்தை

கை பூண் பகட்டின் வருந்தி,

வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2018பாடல் 2020 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்