நூல்கள்›அகநானூறு›பாடல் 2018

பாடல் 2018

இடைக்காடனார்

துஞ்சுவது போல இருளி, விண் பக

இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு

ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,

நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,

ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்; . . . .

ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை

வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,

புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,

தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து

வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை; . . . .

வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,

காமர் துணையொடு ஏமுற வதிய;

அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்

பரப்பி யவைபோற் பாஅய், பல உடன்

நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ; . . . .

இன்னும் வாரார் ஆயின் நல் நுதல்!

யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்

கருவிக் கார்இடி இரீஇய

பருவம் அன்று, அவர், 'வருதும்' என்றதுவே.

மணிமிடைபவளம்

← பாடல் 2017பாடல் 2019 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்