நூல்கள்›அகநானூறு›பாடல் 2011

பாடல் 2011

தாயங்கண்ணனார்

ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,

ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி

ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,

களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,

வால் நிணப் புகவின், கானவர் தங்கை . . . .

அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்

ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,

கொண்டனை சென்மோ - நுண் பூண் மார்ப!

துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்

கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை . . . .

வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்

தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை

இருங் கவுள் கடாஅம் கனவும்,

பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.

மணிமிடைபவளம்

← பாடல் 2010பாடல் 2012 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்