நூல்கள்›அகநானூறு›பாடல் 2012

பாடல் 2012

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,

புன் தாள், வெள் எலி மோவாய் ஏற்றை

செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,

நல் நாள் வேங்கை வீ நன்களம் வரிப்பக்,

கார் தலைமணந்த பைம் புதல் புறவின், . . . .

வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்

கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,

கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு

எரி பரந்தன்ன இலமலர் விரைஇப்,

பூங் கலுழ் சுமந்த தீம் புனல் கான் யாற்று . . . .

வான் கொள் தூவல் வளி தர உண்கும்;

எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்

கொன் ஒன்று வினவினர் மன்னே தோழி!

இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி

கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் . . . .

மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவல் கலித்த

வரி மரல் கறிக்கும் மடப் பிணைத்

திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.

மணிமிடைபவளம்

← பாடல் 2011பாடல் 2013 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்