நூல்கள்›அகநானூறு›பாடல் 2009

பாடல் 2009

வெண்கண்ணனார்

அம்ம வாழி, கேளிர்! முன் நின்று

கண்டனிர் ஆயின், கழறலிர் மன்னோ

நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை

முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப்,

பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை . . . .

எயிறுடை நெடுந் தோடு காப்பப், பல உடன்

வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,

புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்

இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்

கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும் . . . .

நல் தேர் வழுதி கொற்கை முன் துறை

வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்

போது புறங்கொடுத்த உண்கண்

மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.

மணிமிடைபவளம்

← பாடல் 2008பாடல் 2010 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்