நூல்கள்›அகநானூறு›பாடல் 2008

பாடல் 2008

குடவாயில் கீரத்தனார்

'உள்ளல் வேண்டும் ஒழிந்த பின்' என

நள்என் கங்குல் நடுங்கு துணை ஆயவர்

நின் மறந்து உறைதல் யாவது? 'புல் மறந்து

அலங்கல் வான் கழை உதிர்நெல் நோக்கி,

கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண், . . . .

கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத்

தாழிமுதல் கலித்த கோழ் இலைப் பருத்திப்

பொதி வயிற்று இளங் காய் பேடை ஊட்டி,

போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ்

நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் . . . .

கலங்குமுனைச் சீறூர் கை தலை வைப்ப,

கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர்,

செருப்புடை அடியர், தெண் சுனை மண்டும்

அருஞ் சுரம் அரிய வல்ல; வார் கோல்

திருந்து இழைப் பணைத் தோள், தேன் நாறு கதுப்பின், . . . .

குவளை உண்கண், இவளொடு செலற்கு' என

நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர்

அம் சில் ஓதி ஆயிழை! நமக்கே.

மணிமிடைபவளம்

← பாடல் 2007பாடல் 2009 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்