நூல்கள்›அகநானூறு›பாடல் 2007

பாடல் 2007

கபிலர்

மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே;

கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே

யாமம் கொள வரின் கனைஇ, காமம்

கடலினும் உரைஇ, கரை பொழி யும்மே.

எவன்கொல் - வாழி, தோழி! மயங்கி . . . .

இன்னம் ஆகவும், நன்னர் நெஞ்சம்

என்னொடும் நின்னொடும் சூழாது, கைம்மிக்கு,

இறும்பு பட்டு இருளிய இட்டு அருஞ் சிலம்பில்

குறுஞ் சுனைக் குவளை வண்டு படச் சூடிக்,

கான நாடன் வரூஉம், யானைக் . . . .

கயிற்றுப் புறத்தன்ன, கல்மிசைச் சிறு நெறி,

மாரி வானம் தலைஇ நீர் வார்பு,

இட்டு அருங் கண்ண படுகுழி இயவின்,

இருளிடை மிதிப்புழி நோக்கி, அவர்

தளர்அடி தாங்கிய சென்றது, இன்றே? . . . .

மணிமிடைபவளம்

← பாடல் 2006பாடல் 2008 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்