பாடல் 2006
மாமூலனார்
இலங்கு வளை நெகிழச் சாஅய், அல்கலும்,
கலங்குஅஞர் உழந்து, நாம் இவண் ஒழிய
வலம் படு முரசின் சேர லாதன்
முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து, . . . .
நல் நகர் மாந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறையக் குவைஇ, அன்று அவன்
நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன . . . .
ஒரு நாள் ஒரு பகல் பெறினும், வழிநாள்
தங்கலர் வாழி, தோழி! செங் கோல்
கருங் கால் மராத்து வாஅல் மெல் இணர்
சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடி,
கல்லா மழவர் வில் இடம் தழீஇ, . . . .
வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
பழி தீர் காதலர் சென்ற நாட்டே.
மணிமிடைபவளம்