பாடல் 2005
நக்கீரர்
நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று . . . .
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் . . . .
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித், . . . .
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால், . . . .
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
மணிமிடைபவளம்