பாடல் 2003
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
'நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி,
வந்து திறை கொடுத்து, வணங்கினர், வழிமொழிந்து
சென்றீக' என்ப ஆயின், வேந்தனும்
நிலம் வருந் துறாஅ ஈண்டிய தானையொடு
இன்றே புகுதல் வாய்வது; நன்றே . . . .
மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத்
துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுற,
பாசறை வருத்தம் வீட, நீயும்
மின்னு நிமிர்ந்தன்ன பொன் இயற் புனை படை,
கொய்சுவல், புரவி, கை கவர் வயங்கு பரி, . . . .
வண் பெயற்கு அவிழ்ந்த பைங் கொடி முல்லை
வீ கமழ் நெடு வழி ஊதுவண்டு இரிய,
காலை எய்த, கடவுமதி மாலை
அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை
அரமிய வியல் அகத்து இயம்பும் . . . .
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே.
மணிமிடைபவளம்