நூல்கள்›அகநானூறு›பாடல் 2002

பாடல் 2002

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்

உண்ணா மையின் உயங்கிய மருங்கின்

ஆடாப் படிவத்து ஆன்றோர் போல,

வரை செறி சிறு நெறி நிரைபுடன் செல்லும்

கான யானை கவின் அழி குன்றம்

இறந்து, பொருள் தருதலும் ஆற்றாய்; சிறந்த . . . .

சில் ஐங் கூந்தல் நல் அகம் பொருந்தி

ஒழியின், வறுமை அஞ்சுதி; அழிதகவு

உடைமதி வாழிய, நெஞ்சே! நிலவு என

நெய் கனி நெடு வேல் எஃகிலை இமைக்கும்

மழை மருள் பல் தோல் மா வண் சோழர் . . . .

கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெருந் துறை,

இறவொடு வந்து கோதையொடு பெயரும்

பெருங் கடல் ஓதம் போல,

ஒன்றில் கொள்ளாய், சென்று தரு பொருட்கே.

மணிமிடைபவளம்

← பாடல் 2001பாடல் 2003 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்