நூல்கள்›அகநானூறு›பாடல் 1995

பாடல் 1995

பரணர்

எரி அகைந்தன்ன தாமரை இடை இடை

அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்

கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,

ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!

பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் . . . .

புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,

நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,

மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,

எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை

வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே . . . .

பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து

அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,

மை அணி யானை, மறப் போர்ச் செழியன்

பொய்யா விழவின் கூடற் பறந்தலை,

உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் . . . .

கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,

இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்

ஓடுபுறம் கண்ட ஞான்றை,

ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே

களிற்றியானை நிரை

← பாடல் 1994பாடல் 1996 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்