நூல்கள்›அகநானூறு›பாடல் 1994

பாடல் 1994

மாமூலனார்

அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்

பழி இலர்ஆயினும், பலர் புறங்கூறும்

அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்

சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;

நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் . . . .

ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்

நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்

கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய

வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் . . . .

சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று

அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,

பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,

சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி

இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை . . . .

நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,

நம் நீத்து உறையும் பொருட்பிணிக்

கூடாமையின், நீடியோரே!

களிற்றியானை நிரை

← பாடல் 1993பாடல் 1995 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்