நூல்கள்›அகநானூறு›பாடல் 1991

பாடல் 1991

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்

கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி

சிதலை செய்த செந் நிலைப் புற்றின்

மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி,

இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல்

ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி . . . .

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்

பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய்,

தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே;

நாள் இடைப்படின், என் தோழி வாழாள்;

தோளிடை முயக்கம் நீயும் வெய்யை . . . .

கழியக் காதலர்ஆயினும், சான்றோர்

பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;

வரையின் எவனோ? வான் தோய் வெற்ப!

கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்

மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார் . . . .

தொன்று இயல் மரபின் மன்றல் அயர,

பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி,

நொதுமல் விருந்தினம் போல, இவள்

புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே.

களிற்றியானை நிரை

← பாடல் 1990பாடல் 1992 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்