பாடல் 1990
பாலை பாடிய பெருங்கடுங்கோ
உள் ஆங்கு உவத்தல் செல்லார், கறுத்தோர்
எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி
வருவர் வாழி, தோழி! அரச
யானை கொண்ட துகிற் கொடி போல,
அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி . . . .
ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர,
மழை என மருண்ட மம்மர் பல உடன்
ஓய்களிறு எடுத்த நோயுடை நெடுங் கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும்
அத்தக் கேழல் அட்ட நற் கோள் . . . .
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப,
குருதி ஆரும் எருவைச் செஞ் செவி,
மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட
புண் தேர் விளக்கின், தோன்றும்
விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே! . . . .
களிற்றியானை நிரை