நூல்கள்›அகநானூறு›பாடல் 1982

பாடல் 1982

காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்

நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த

கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,

விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,

காமர் சேவல் ஏமம் சேப்ப;

முளி அரில் புலம்பப் போகி, முனாஅது . . . .

முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,

அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,

உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,

இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்

வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் . . . .

ஈண்டு வினை மருங்கின் மீண்டோ ர்மன் என,

நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக

நம்மொடு பசலை நோன்று, தம்மொடு

தானே சென்ற நலனும்

நல்கார் கொல்லோ, நாம் நயந்திசி னோரே? . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1981பாடல் 1983 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்