நூல்கள்›அகநானூறு›பாடல் 1967

பாடல் 1967

ஈழத்துப் பூதன் தேவனார்

முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை

ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்

பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்

புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,

கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய . . . .

நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்

நடுங்கு துயர் களைந்த நன்னராளன்

சென்றனன் கொல்லோ தானே குன்றத்து

இரும் புலி தொலைத்த பெருங் கை யானைக்

கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் . . . .

இருஞ் சிறைத் தொழுதி ஆர்ப்ப, யாழ் செத்து,

இருங் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்

காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றி,

கொடு விரல் உளியம் கெண்டும்

வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே? . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1966பாடல் 1968 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்