பாடல் 1966
மதுரைப் பேராலவாயார்
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் . . . .
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம் . . . .
நனி நீடு உழந்தனை மன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
தாழ் இருங் கூந்தல் நம் காதலி . . . .
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே!
களிற்றியானை நிரை