பாடல் 1963
மதுரை எழுத்தாளன்
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை . . . .
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே . . . .
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து . . . .
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறை யேமே!
களிற்றியானை நிரை