நூல்கள்›அகநானூறு›பாடல் 1956

பாடல் 1956

மருதன் இளநாகனார்

'நல் நுதல் பசப்பவும், ஆள்வினை தரீஇயர்,

துன் அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்

பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்

சூழ்ந்திசின் வாழிய, நெஞ்சே! வெய்துற

இடி உமிழ் வானம் நீங்கி, யாங்கணும் . . . .

குடி பதிப்பெயர்ந்த சுட்டுடை முது பாழ்,

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்,

பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,

உயிர் திறம் பெயர, நல் அமர்க் கடந்த

தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர . . . .

செஞ் செவி எருவை, அஞ்சுவர இகுக்கும்

கல் அதர்க் கவலை போகின், சீறூர்ப்

புல் அரை இத்திப் புகர் படு நீழல்

எல் வளி அலைக்கும், இருள் கூர் மாலை,

வானவன் மறவன், வணங்குவில் தடக் கை . . . .

ஆனா நறவின் வண் மகிழ், பிட்டன்

பொருந்தா மன்னர் அருஞ் சமத்து உயர்த்த

திருந்துஇலை எஃகம் போல,

அருந் துயர் தரும், இவள் பனி வார் கண்ணே!

களிற்றியானை நிரை

← பாடல் 1955பாடல் 1957 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்