நூல்கள்›அகநானூறு›பாடல் 1952

பாடல் 1952

எருமை வெளியனார்

பின்னொடு முடித்த மண்ணா முச்சி

நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ;

வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு

ஒரு காழ் முத்தம் இடைமுலை விளங்க,

வணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய் . . . .

நின் நோய்த் தலையையும் அல்லை; தெறுவர

'என் ஆகுவள்கொல், அளியள்தான்?' என,

என் அழிபு இரங்கும் நின்னொடு யானும்

ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி

இருவேம் நம் படர் தீர வருவது . . . .

காணிய வம்மோ - காதல் அம் தோழி!

கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம்

மடி பதம் பார்க்கும், வயமான் துப்பின்,

ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப்

பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி . . . .

விடு பொறிச் சுடரின் மின்னி, அவர்

சென்ற தேஎத்து நின்றதால், மழையே

களிற்றியானை நிரை

← பாடல் 1951பாடல் 1953 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்