பாடல் 1946
நோய்பாடியார்
யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
அரம் போழ் நுதிய வாளி அம்பின் . . . .
நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
நெல்லி நீளிடை எல்லி மண்டி,
நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் . . . .
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு . . . .
நிலம் படு மின்மினி போல, பல உடன்
இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே!
களிற்றியானை நிரை