நூல்கள்›அகநானூறு›பாடல் 1944

பாடல் 1944

மாமூலனார்

உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்

அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்

ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்

சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;

நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் . . . .

பாடிச் சென்ற பரிசிலர் போல

உவ இனி வாழி, தோழி! அவரே,

பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்

செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்

மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி . . . .

மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்

வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,

மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை

உயவல் யானை வெரிநுச் சென்றன்ன

கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி . . . .

காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்

ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,

நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,

நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு

அரியவால்' என அழுங்கிய செலவே! . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1943பாடல் 1945 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்