நூல்கள்›அகநானூறு›பாடல் 1942

பாடல் 1942

கருவூர்க் கண்ணம் புல்லனார்

கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,

திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு

பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்

கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,

முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி . . . .

பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,

கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்

சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,

அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,

கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து . . . .

மன்று நிறை பைதல் கூர, பல உடன்

கறவை தந்த கடுங் கால் மறவர்

கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ

முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை

மட மயில் அன்ன என் நடை மெலி பேதை . . . .

தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,

'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்

சேக் கோள் அறையும் தண்ணுமை

கேட்குநள் கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே!

களிற்றியானை நிரை

← பாடல் 1941பாடல் 1943 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்