நூல்கள்›அகநானூறு›பாடல் 1937

பாடல் 1937

மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்

இன் இசை உருமொடு கனை துளி தலைஇ,

மன் உயிர் மடிந்த பானாட் கங்குல்,

காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,

வரி அதள் படுத்த சேக்கை, தெரி இழைத்

தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை . . . .

கூதிர், இல் செறியும் குன்ற நாட!

வனைந்து வரல் இள முலை ஞெமுங்க, பல் ஊழ்

விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற,

நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே

நும் இல் புலம்பின் நும் உள்ளுதொறும் நலியும் . . . .

தண்வரல் அசைஇய பண்பு இல் வாடை

பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி,

மனைமரம் ஒசிய ஒற்றிப்

பலர் மடி கங்குல், நெடும் புறநிலையே!

களிற்றியானை நிரை

← பாடல் 1936பாடல் 1938 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்