நூல்கள்›அகநானூறு›பாடல் 1938

பாடல் 1938

மதுரை மருதன் இளநாகனார்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் . . . .

மரம் செல மிதித்த மாஅல் போல,

புன் தலை மடப் பிடி உணீஇயர், அம் குழை,

நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் . . . .

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த

தண் நறுங் கழுநீர்ச் செண் இயற் சிறுபுறம்

தாம் பாராட்டிய காலையும் உள்ளார் . . . .

வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு

அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்

பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே!

களிற்றியானை நிரை

← பாடல் 1937பாடல் 1939 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்