பாடல் 1933
மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப,
வேந்தனும் வெம்பகை தணிந்தனன்; தீம் பெயற்
காரும் ஆர்கலி தலையின்று. தேரும்
ஓவத்தன்ன கோபச் செந் நிலம்,
வள் வாய் ஆழி உள் உறுபு உருள . . . .
கடவுக காண்குவம் - பாக! மதவு நடைத்
தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய,
கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி,
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்
கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் . . . .
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க,
மனைமனைப் படரும் நனை நகு மாலை,
தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன்
பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப்
புன் காழ் நெல்லிப் பைங்காய் தின்றவர் . . . .
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி,
'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்!
பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி,
வருகுவைஆயின், தருகுவென் பால்' என,
விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி . . . .
திதலை அல்குல் எம் காதலி
புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே
களிற்றியானை நிரை