நூல்கள்›அகநானூறு›பாடல் 1932

பாடல் 1932

சீத்தலைச் சாத்தனார்

அறியாய், வாழி தோழி! இருள் அற

விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்

கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,

நெடுங் கான் முருங்கை வெண் பூத் தாஅய்,

நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை . . . .

வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு

கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்

உள் ஊன் வாடிய சுரிமூக்கு நொள்ளை

பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,

விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் . . . .

எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்

அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,

'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்

வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்

பொருளே காதலர் காதல் . . . .

'அருளே காதலர்' என்றி, நீயே

களிற்றியானை நிரை

← பாடல் 1931பாடல் 1933 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்