நூல்கள்›அகநானூறு›பாடல் 1931

பாடல் 1931

நொச்சிநியமங் கிழார்

'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல்,

கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப்

பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள்

இன்னா இசைய பூசல் பயிற்றலின்,

"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் . . . .

ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம்

மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச்

சிலையுடை இடத்தர் போதரும் நாடன்

நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு

அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என . . . .

இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால்

சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை

இன் உயிர் கழிவது ஆயினும், நின் மகள்

ஆய்மலர் உண்கண் பசலை

காம நோய்' எனச் செய்யாதீமே . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1930பாடல் 1932 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்