நூல்கள்›அகநானூறு›பாடல் 1929

பாடல் 1929

கருவூர்ப் பூதஞ்சாத்தனார்

கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,

நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;

வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;

மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,

பகலும் நம்வயின் அகலா னாகிப் . . . .

பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,

இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,

'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,

மல்லல் மூதூர் மறையினை சென்று,

சொல்லின் எவனோ பாண! 'எல்லி . . . .

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்

துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,

கண் நிறை நீர் கொடு கரக்கும்,

ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே

களிற்றியானை நிரை

← பாடல் 1928பாடல் 1930 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்