பாடல் 1928
வண்ணப்புறக் கந்தரத்தனார்
'கிளியும், பந்தும், கழங்கும், வெய்யோள்
அளியும், அன்பும், சாயலும், இயல்பும்,
முன்நாள் போலாள்; இறீஇயர், என் உயிர்' என,
கொடுந் தொடைக் குழவியொடு வயின்மரத்து யாத்த
கடுங் கட் கறவையின் சிறுபுறம் நோக்கி . . . .
குறுக வந்து, குவவுநுதல் நீவி,
மெல்லெனத் தழீஇயினேனாக, என் மகள்
நன்னர் ஆகத்து இடைமுலை வியர்ப்ப,
பல் கால் முயங்கினள் மன்னே! அன்னோ!
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி . . . .
வறன் நிழல் அசைஇ, வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும்
காடு உடன்கழிதல் அறியின் தந்தை
அல்குபதம் மிகுத்த கடிஉடை வியன் நகர்,
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போல . . . .
கோதை ஆயமொடு ஓரை தழீஇ,
தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப, அவள்
ஆடுவழி ஆடுவழி, அகலேன் மன்னே!
களிற்றியானை நிரை