நூல்கள்›அகநானூறு›பாடல் 1925

பாடல் 1925

அள்ளூர் நன்முல்லையார்

சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்

ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,

கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,

நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய

அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை . . . .

வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!

யாரையோ? நிற் புலக்கேம், வாருற்று,

உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,

பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,

வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் . . . .

கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்

களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்

ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன்

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்

ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க; . . . .

சென்றீ, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?

களிற்றியானை நிரை

← பாடல் 1924பாடல் 1926 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்