நூல்கள்›அகநானூறு›பாடல் 1914

பாடல் 1914

குடவாயிற் கீரத்தனார்

ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்,

வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்ப

தனி மணி இரட்டும் தாளுடைக் கடிகை,

நுழை நுதி நெடு வேல், குறும் படை, மழவர்

முனை ஆத் தந்து, முரம்பின் வீழ்த்த . . . .

வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர்

வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார்,

நடுகல் பீலி சூட்டி, துடிப்படுத்து,

தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்

போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ் சுரம் . . . .

துணிந்து, பிறள் ஆயினள் ஆயினும், அணிந்து அணிந்து,

ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ, தன்

மார்பு துணையாகத் துயிற்றுக தில்ல

துஞ்சா முழவின் கோவற் கோமான்

நெடுந் தேர்க் காரி கொடுங்கால் முன்துறை . . . .

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும்

நெறி இருங் கதுப்பின் என் பேதைக்கு,

அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே!

களிற்றியானை நிரை

← பாடல் 1913பாடல் 1915 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்