நூல்கள்›அகநானூறு›பாடல் 1911

பாடல் 1911

நல்வெள்ளியார்

நெருநல் எல்லை ஏனல் தோன்றி,

திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து,

புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,

இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி,

சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் . . . .

குளிர் கொள் தட்டை மதன் இல புடையா,

'சூரர மகளிரின் நின்ற நீ மற்று

யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச்

சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு

இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் . . . .

உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல்

கடிய கூறி, கை பிணி விடாஅ,

வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற

என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின்

சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து . . . .

இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்

தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ.

சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே

மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று,

என் குறைப் புறனிலை முயலும் . . . .

அண்கணாளனை நகுகம், யாமே.

களிற்றியானை நிரை

← பாடல் 1910பாடல் 1912 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்