நூல்கள்›அகநானூறு›பாடல் 1910

பாடல் 1910

மாமூலனார்

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்

புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,

'நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?' என,

மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,

இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து . . . .

மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,

கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,

நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,

கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன

புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் . . . .

கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,

'சென்றார்' என்பு இலர் தோழி! வென்றியொடு

வில் இலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்

தமிழ் கெழு மூவர் காக்கும்

மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1909பாடல் 1911 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்