நூல்கள்›அகநானூறு›பாடல் 1902

பாடல் 1902

ஒரோடோ கத்துக் கந்தரத்தனார்

மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,

பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;

புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,

காடே கம்மென்றன்றே; அவல . . . .

கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,

பதவின் பாவை, முனைஇ, மதவு நடை

அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,

தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;

அனைய கொல் வாழி, தோழி! மனைய . . . .

தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்

மௌவல், மாச் சினை காட்டி,

அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!

களிற்றியானை நிரை

← பாடல் 1901பாடல் 1903 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்