நூல்கள்›அகநானூறு›பாடல் 1900

பாடல் 1900

காவன் முல்லைப் பூதனார்

'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்

துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,

அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்

தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,

மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் . . . .

செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,

வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப்

பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,

எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்

மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் . . . .

கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,

மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,

சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,

பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை . . . .

இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,

மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்

செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,

இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்

செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் . . . .

பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த

வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்

ஊறாது இட்ட உவலைக் கூவல்,

வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்

இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, . . . .

இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்

பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.

களிற்றியானை நிரை

← பாடல் 1899பாடல் 1901 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்