நூல்கள்›அகநானூறு›பாடல் 1894

பாடல் 1894

மாமூலனார்

எம் வெங் காமம் இயைவது ஆயின்,

மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்

கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த

பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்

தோகைக் காவின் துளுநாட்டு அன்ன . . . .

வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்

செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,

அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல

தோழிமாரும் யானும் புலம்ப,

சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் . . . .

பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்

செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,

அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்

துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,

கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி . . . .

வன் கை எண்கின் வய நிரை பரக்கும்

இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு

குன்ற வேயின் திரண்ட என்

மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!

களிற்றியானை நிரை

← பாடல் 1893பாடல் 1895 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்