நூல்கள்›அகநானூறு›பாடல் 1890

பாடல் 1890

ஔவையார்

வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,

இலை இல மலர்ந்த முகை இல் இலவம்

கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த

அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி . . . .

கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்

எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,

வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்

படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,

மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் . . . .

அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,

நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து

அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்

அழுதல் மேவல ஆகி,

பழி தீர் கண்ணும் படுகுவமன்னே! . . . .

களிற்றியானை நிரை

← பாடல் 1889பாடல் 1891 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்