நூல்கள்›அகநானூறு›பாடல் 1889

பாடல் 1889

அம்மூவனார்

வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,

மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,

முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,

புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!

நெய்தல் உண்கண் பைதல கலுழ . . . .

பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்

அரிது உற்றனையால் பெரும! உரிதினின்

கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு

குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்

பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் . . . .

மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,

மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்

வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே

களிற்றியானை நிரை

← பாடல் 1888பாடல் 1890 →
தமிழ் இலக்கியம்Tamil Literature
நாவல்கள்